Sunday, April 13, 2008
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....
உங்களுக்கு தமிழ் புத்தாண்டில் அதீத ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, அடுத்தவன் நாம கொண்டாடும் பண்டிகையை தீர்மானிக்கும் சர்வாதிகாரியாக இருக்கக் கூடாது என்பதற்காகவே இதை சிறப்பாக கொண்டாடுங்கள்....
நான் கேட்கிறேன், இந்த புத்தாண்டை மாற்றுங்கள் என்று ஒரு ஆயிரம் பேராவது கொடி பிடித்தார்கள? ஊர்வலம் போனார்களா? அல்லது இதுதான் இப்போது அத்தியாவசியப் பிரச்சினையா?
ஒரு மதத்தின் வழிபாடு மற்றும் பழக்க நடைமுறைகளை மாற்ற ஒரு அரசாங்கத்துக்கு, அதுவும் பெரும்பான்மை இல்லாத அரசாங்கத்துக்கு
இருக்கிறதா?
இன்றைக்கு இதை கொண்டாடாதே என்று இந்துக் கோயில்களுக்கு ஆணையிடுவது அப்பட்டமான துஷ்ப்ரயோகம் இல்லையா? பிற மதத்தவர்களின் நம்பிக்கையில் இவ்வாறு தலையிடுவீர்களா?
ஜன நாயகம் என்ற பெயரிலும் தமிழ்ப்பற்று என்னும் பெயரிலும் எதேச்சாதிகாரமாக நடந்து கொள்வது ஆணவத்தின் உச்சம்...
நிச்சயம் உங்களுக்கு மக்களால் பாடம் புகட்டப்படும்....
ஈ. ரா.
Thursday, February 28, 2008
புத்தபிரான் சொன்னது
உங்களிடம் தெரிவிக்கப்பட்டது என்பதற்காகவோ, இதுதான் மரபு என்பதற்காகவோ அல்லது நீங்கள் கற்பனை செய்து வைத்தது இதுவே என்பதற்காகவோ மட்டும் எதையும் நம்பி விட வேண்டாம். ஆசானை மதிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் சொன்னவற்றை எல்லாம் நம்பி விட வேண்டாம். ஆயின் போதுமான பரிசீலனைக்கும் பகுத்தாய்வுக்கும் பிறகு எது நல்லது, பயனுள்ளது, அனைவருக்கும் எது நன்மை தருவது என்று தோன்றுகிறதோ, அந்தச் சித்தாந்தத்தை தேர்ந்தெடுத்து நம்புங்கள். அதனையே விடாப்பிடியாகப் பின்பற்றுங்கள். அதனையே உங்கள் வழிகாட்டி ஆக்குங்கள்.
Subscribe to:
Posts (Atom)